செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (17:09 IST)

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பிரேமலதா பாராட்டியிருக்க வேண்டும்: திருமாவளவன்

ஒரு பெண் என்ற அடிப்படையில் பிரேமலதா விஜயகாந்த் உரிமைத்தொகை திட்டத்தை பாராட்டி இருக்க வேண்டும். இந்த திட்டத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என விருதுநகரில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
அளித்துள்ளார்.
 
மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்களிடையே செல்வாக்கு உயரும் என்றும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை இனி எந்த ஒரு ஆட்சியாளரும் நிறுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
 
மேலும் இந்தியா கூட்டணி உருவானதில் இருந்து, பிரதமர் நரேந்திரமோடி பதற்றத்துடன் இருக்கிறார் என்று கூறிய விசிக தலைவர் திருமாவளவன், ’தமிழ்நாட்டில் ஆவின் பொருட்களின் விலை உயர்வை அரசு மறுபரிசீலனை செய்து உயர்த்திய விலையை குறைக்க அரசு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
 
Edited by Mahendran