1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Thirumavalavan says about bjp

பாஜகவில் இருந்து வந்தவர்களுக்கு விசிகவில் இடமில்லை, ஆனால் விதிவிலக்கு..! திருமாவளவன்..!

விசிக
பாஜகவில் இருந்து வந்தவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இடமில்லை என்றும் ஆனால் விதிவிலக்கு உண்டு என்றும் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். 
 
கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சியில் பாஜக கட்சியில் இருந்து விலகி 500க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இன்று முதல் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களை வரவேற்று விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது:
 
பிஜேபியிலிருந்து விலகி வரக் கூடியவர்களுக்கு விசிகவில் இடமில்லை என்பது ஏற்கனவே அறிவித்ததாகும்.  எனினும் இன்று பொள்ளாச்சியில்  கிறித்தவ போதகர்கள் இருவரை  இணைத்துக் கொண்டோம். மேடைக்கு வந்தோரை, குறிப்பாக சிறுபான்மையினரை அரவணைப்பது எமது கடமையல்லவா? இந்த இணைப்பு விதிவிலக்கு ஆகும்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்