1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. These 13 districts to have rain in next 3 hours

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டத்தில் மழை: எங்கு??

மழை
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.

 
கடந்த சில வாரங்களாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் இந்த மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 

அதுமட்டுமின்றி வளிமண்டல சுழற்சி காரணமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
தொண்டையில் சிக்கிய சாக்லெட்; துடிதுடித்து இறந்த சிறுவன்