வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 6 அக்டோபர் 2018 (09:29 IST)

அதிமுகவில் டிடிவி தினகரன்? ஜெயகுமார் அதிரடி பதில்

கடந்த சில நாட்களாக துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தினகரனை சென்று பார்த்ததாகவும், தினகரன் ஓபிஎஸை பார்த்ததாகவும் இருதரப்பினர்களும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமாரிடம், 'டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்த்து கொள்ளப்படுவாரா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், தினகரனை பொறுத்தவரையில் அதிமுகவில் மீண்டும் இணையலாம் என்ற முடிவை எடுக்கலாம். அவருக்கு வேறு வழி இல்லை. ஆனால் 'டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்.  தினகரனை அதிமுகவில் சேர்ப்பது என்பது நடக்காத ஒன்று என்று கூறினார்.

மேலும் அமமுக கட்சியில் அவர் ஒருவர் மட்டுமே கடைசியில் மிஞ்சுவார். அக்கட்சி நாம் ஒருவர், நமக்கு ஒருவர் என்ற நிலையில் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.