1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2017 (23:05 IST)

நேரு தன் மனைவியை கூட வேகமாக தான் கொஞ்சுவார் - மு.க.ஸ்டாலின்

நேரு தன் மனைவியை கொஞ்சுவது கூட வேகமாக தான் கொஞ்சுவார், அவ்வளவு வேகமானவர் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

 

 
முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம்-லதா தம்பதியர் மகள் ஸ்ரீஜனனிக்கும், டாக்டர் விவேக் என்பவருக்கும் திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் திருமண விழா நடைபெற்றது.
 
திருமண விழாவை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். விழாவில் பொதுச்செயலாளர் அன்பழகன், பொன்முடி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, தா.பாண்டியன் உள்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
 
விழாவில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ”இந்த ஆட்சியில் திமுகவின் முக்கியமானவர்கள் மீது கடுமையான வழக்குகள் எல்லாம் பாய்ந்தது. அப்படிப்பட்ட வழக்குகளில் கே.என்.நேரு மீது தான் அதிக அளவு வழக்குகள் பாய்ந்தது.
 
அந்த மிரட்டலுக்கு எல்லாம் பணியாமலும் தி.மு.க.வுக்காகவும், கலைஞருக்காகவும் நின்று இருப்பது தான் எனக்கு பெருமையான விசயம். நேரு மாதிரி வேகமானவர்கள் இருக்க முடியாது.
 
ஒரு முறை செல்வேந்திரன் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். நேரு தன் மனைவியை கொஞ்சுவது கூட வேகமாக தான் கொஞ்சுவார். கொஞ்சுவது என்பது மென்மையானது, அன்பானது, பொறுமையானது. அதை கூட நேரு, வேகமாக தான் செய்வார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் 
 
நேற்றிலிருந்து வாட்சஸ் ஆப், பேஸ் புத்தகத்தில் வரும் கேலி கூத்து, ஆத்திரம் நிறைந்த பதிவுகள் பல வருகின்றன. உலகத்திலே ஓரே ஓட்டுக்கு 3 முதல்வர் பதவி ஏற்றது தமிழ்நாட்டில் மட்டும் தான்” என்றார்.