செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (18:30 IST)

மீண்டும் இணைகிறார்களா அஜித்தும் கே எஸ் ரவிக்குமாரும் ? - டிவிட்டர் வைரல் !

கே எஸ் ரவிக்குமார்

அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் படம் இயக்க இருக்கிறார் என்ற தகவல் டிவிட்டரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த வில்லன் மற்றும் வரலாறு ஆகிய இரு படங்களும் வெற்றி படங்களாக அமைந்து ரசிகர்களை திருப்திப் படுத்தியது. இந்நிலையில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை  கே எஸ் ரவிக்குமார் இயக்க இருப்பதாகவும் அதை சன்பிக்ஸர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் நேற்று முதல் டிவிட்டரில் ஒரு வதந்தி உலாவந்து கொண்டு இருந்தது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ‘அன்பான ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு, நேற்று முதல் ஒரு வதந்தி வேகமாகப் பரவிக் கொண்டு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் அஜித்தை நான் இயக்குவதாக. ஆனால் அது உண்மை இல்லை. அதுபோல எனக்கு டிவிட்டரில் எந்த கணக்கும் இல்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.