திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2024 (10:46 IST)

மஞ்சுமெல் பாய்ஸ் பார்த்தும் அடங்கல.. குணா குகைக்குள் எகிறி குதித்த இளசுகள்! – கைது செய்த போலீஸ்!

Guna Caves
சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்த்துவிட்டு குணா குகையை காண சென்ற இளைஞர் கூட்டம் குகைக்கு செல்ல தடுப்பை தாண்டி குதித்ததால் போலீஸார் கைது செய்துள்ளனர்.



சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் தமிழகத்திலும் மிகப்பெரும் ஹிட் அடித்துள்ளது. 2006ல் கேரளாவிலிருந்து குணா குகையை சுற்றி பார்க்க வந்த நண்பர்கள் குழுவில் ஒருவர் குகை பள்ளத்தில் சிக்கிக் கொள்ள, அவரை நண்பர்கள் எப்படி காப்பாற்றினார்கள் என்பதே கதை.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏராளமானோர் குணா குகையை காண கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். குணா குகையில் உள்ள ஆபத்தை படம் காட்டியிருந்தபோதும் சிலர் அதை உணராமல் குகைக்குள் சென்று பார்க்க முயற்சிக்கும் அபாயமான விஷயங்களும் நடக்கின்றன.

குணா குகையை சுற்றி பார்க்க சென்ற கிருஷ்ணகிரியை சேர்ந்த நண்பர்கள் குழு ஒன்று தடுப்பு வேலியை தாண்டி குதித்து குகைக்குள் சென்று பார்க்க முயற்சித்துள்ளனர். தடுப்பு வேலியை தாண்டி குதித்த விஜய், பரத் மற்றும் ரஞ்சித் என்ற மூன்று சுற்றுலா பயணிகளையும் வனச்சட்டத்தின்படி வனத்துறை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளை மேற்கொண்டால் சட்டநடவடிக்கையை சந்திக்க நேரிடும் என பயணிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K