1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 22 நவம்பர் 2022 (17:35 IST)

சென்னையில் குளிர்ந்த வானிலை சில நாட்களுக்கு தொடரும்: வானிலை ஆய்வு மையம்

chennai snow
சென்னையில் குளிர்ந்த வானிலை சில நாட்களுக்கு தொடரும்: வானிலை ஆய்வு மையம்
சென்னையில் கடந்த சில நாட்களாக குளிர் வாட்டி வரும் நிலையில் இன்னும் சில நாட்களுக்கு சென்னையில் குளிர்ந்த வானிலை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக கொடைக்கானல் ஊட்டி போல் சென்னையில் குளிர்ச்சியாக உள்ளது என்பதும் இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. 
 
சென்னையில் குறைவான வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் பனி மூட்டமாக குளிர்ந்த வானிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக மழை பெய்யாததால் இந்த அளவுக்கு குளிர் உள்ளதாகவும், என்றும் மழை பொய்த்ததால் தான் குளிர் அதிகமாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva