வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 8 பிப்ரவரி 2018 (13:27 IST)

மீன் குழம்பு சமைக்காததால் ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை

திருச்சியில் கணவர் கூறியபடி மனைவி, மீன் குழம்பு சமைக்காததால் ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்தவர் சுரேஷ்(40). இவரது மனைவி சத்யா (35). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சுரேஷ்  மனைவி சத்யாவிடம் மீன் வாங்கி கொடுத்து அதனை சமைத்து வைக்கும் படி கூறி விட்டு, வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சுரேஷ், மனைவி மீன் குழம்பு சமைக்காத்தையறிந்து அவரிடம் சண்டையிட்டுள்ளார்.
 
இதனால் மனவேதனை அடைந்த சத்யா வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மனைவியை காப்பற்ற முயன்ற சுரேஷும் விபத்தில் சிக்கினார். உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேஷ், சத்யா  பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.