திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 12 நவம்பர் 2023 (18:30 IST)

மக்களுக்கு பிரியாணி வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

vijay makkal iyakkam
சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் பிரியாணி வழங்கி தீபாவளியை கொண்டாடினர்.

விஜய்யின் மக்கள் இயக்கம் ஆக்டிவாக இக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள், விடுதலை போராட்ட வீரர்கள் பிறந்தநாள், நினைவுதினம் ஆகியவற்றின் போது அவர்களின் சிலைகளுக்கு, புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும் என மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் மக்கள் இயக்கத்தில் மரியாதை செலுத்தி வருவதுடம் மக்களுக்கும் உதவி செய்து வருகின்றனர்..

இன்று தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியில் பொதுமக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் பிரியாணி வழங்கி தீபாவளியை கொண்டாடினர். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.