ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2023 (14:44 IST)

நடிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை… இயக்குனர் வெற்றிமாறன் பதில்!

இயக்குனர் அமீர் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் மாயவலை. இந்த படத்தில் அவரோடு ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்சிதா, வின்செண்ட் அசோகன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜ இசையமைத்துள்ளார். இந்த படத்தை அமீரோடு சேர்ந்து தயாரித்துள்ளார் வெற்றிமாறன்.

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது நடிப்பது பற்றி பேசிய வெற்றிமாறன் “நடிப்பது என்பதும், இயக்குவது என்பதும்  வேறு வேறு சவாரி. அதை ரெண்டையும் ஒரு சிலரால் சிறப்பாக செய்யமுடியும். என்னால் அது முடியாது. இப்போதைக்கு எனக்கு நடிப்பில் ஆர்வம் கிடையாது” எனக் கூறினார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அமீர், வெற்றிமாறனை தன்னுடைய இயக்கத்தில் நடிக்க வைக்க ஆசைப்படுவதாக கூறினார். முன்னதாக லியோ வெற்றிவிழாவில் இயக்குனர் லோகேஷும் வெற்றிமாறனை வில்லனாக நடிக்கவைக்க திட்டமிட்டதாகவும், அது நடக்காமல் போனதாகவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.