செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (15:33 IST)

இன்ஸ்டாகிராமில்பழகி இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் தலைமறைவு போலீஸ் வலை வீச்சு!

திருச்சி பட்டவர்த் ரோடு ஆண்டாள் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (வயது 28).
 (பெயர் மாற்றப்பட்டுள்ளது.
 
இவர்  ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு தனியார் கார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக பால்பண்ணை விஷ்வாஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ பொன்னையன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்தப் பழக்கம் காதலாக மாறியது.
 
பின்னர் ஆசை வார்த்தை கூறி பொன்னையன் அந்த இளம் பெண்ணை கற்பழித்தார். இதில் கர்ப்பமான அவர் காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.
ஆனால் அவர் கர்ப்பமாக இருக்கும் போது திருமணம் செய்து கொண்டால் அக்கம் பக்கத்தினர் கேவலமாக பேசுவார்கள் ஆகவே கர்ப்பத்தை கலைத்து விடு எனக் கூறியதாக தெரிகிறது. 
 
இதை நம்பிய செல்வி தனது கர்ப்பத்தை கலைத்தார்.
அதன் பின்னரும் பொன்னையன் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போதும் காதலன் நம்பிக்கை அளித்ததால் போலீசை புகார் கொடுக்கவில்லை.
அதன் பின்னர் காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டபோது, பொன்னையன் அவருடன் ஆன உறவை துண்டித்து விட்டார் இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட செல்வி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியை சந்தித்து புகார் மனு அளித்தார்.
 
பின்னர் கமிஷனர் உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பொன்னையன் மீது வழக்கு பதிந்து செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.