வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 9 அக்டோபர் 2024 (08:25 IST)

வான்படை சாகச நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசு முறையாக முன் ஏற்பாட்டு பணிகளை மேற் கொள்ள வில்லை-ஜிகே. வாசன் பேச்சு......

மதுரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது முன்னாள் எம்பி சித்தன், முன்னாள் எம்எல்ஏ கேஎஸ்கே ராஜேந்திரன், மாநகர மாவட்ட தலைவர் ராஜாங்கம், பாரத் நாச்சியப்பன் உள்ளிட்ட மாநில, தென்மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜிகே. வாசன் பங்கேற்று தேவையான உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
 
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜி.கே.வாசன்.....
 
வான்படை சாகச் நிகழ்ச்சியை சென்னையில் நடத்த மத்திய அரசு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி.
 
ஆனால் தமிழ்நாடு அரசு முறையாக ஏற்பாடுகளை செய்யவில்லை என்றும் மக்கள் லட்சக்கணக்கில் கூடுவர் என, தெரிந்தும், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்யவில்லை. 5 பேர் உயிரிழந்தனர். பலர் மயங்கினர். இதற்கு அரசின் அஜாக்கிரதையே காரணம். உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 25-லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
 
மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருட்கள் விற்கப்படுகிறது. தனிக்காவல் படையை உருவாக்கி தடுக்கவேண்டும், சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து, கொலை. திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்துள்ளன.
 
தமிழ்நாடு அரசு நினைத்தால் காலகெடு வைத்து மதுக்கடைகளை மூடலாம். மத்திய அரசு மீது பழி போடுகின்றனர். மக்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். ஏமாற்ற முடியாது.
 
திமுக அரசு மக்களின் சுமையை குறைக்காமல், சொத்துவரி உயர்வு போன்ற பல்வேறு வகையில் கடந்த மூன்றரை ஆண்டாக வாக்களித்த மக்களை ஏமாற்றுகிறது. எல்லாத்துறையிலும் செயல்பாடு சரியின்றி நாளுக்கு மக்களுக்கு சுமை அதிகரிக்கிறது.
 
ஜம்மு காஷமீரில் பாஜகவுக்கு பின்னடைவு என்றாலும், தனிக்கட்சியாக 25 தொகுதிக்கு மேல் பிடித்தது. அம்மாநில மக்கள் பாஜகவை எதிர்க்கவில்லை என, தெரிகிறது. ஆனால் காங்கிரஸ் பிராந்திய கட்சிகளுடன் சேர்ந்த வெற்றி அதிக தொகுதிகளை
பிடித்துள்ளது.
 
நல்லாட்சியால் ஹரியானா 3வது முறை ஆட்சியை பிடிக்கிறது பாஜக. தமிழகத்தில் ஆட்சி பங்கு, அதிகாரம் தேவை என்பது தலைவர் மூப்பனார் ஆரம்பித்த பொற்சொல், இது வேண்டும் என்பது உள்மனதிலும் உள்ளது. இந்த எண்ணம்
 
நிறைவேற இலக்கு வேண்டும். வெற்றி, எண்ணிக்கைக்கு ஏற்ப நிறைவேறலாம்.
 
நடிகர் விஜய் போன்ற யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் அவர் கட்சி தொடங்கி எல்லா கட்சிக்கும் பாதிப்பு இருந்தாலும், தேர்தலில் மக்கள் அவர்களின் பணி, நம்பிக்கை அடிப்படையில் வாக்களிப்பர். 
 
நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் 18 பெட்டிகளுடன் இயக்கலாம் என, என்ஜின் பலம் இருந்தாலும் 8 பெட்டிகளுடன் ஓடுகிறது. கூடுதல் 10 பெட்டிகளுடன் இயக்கினால் தென்மாவட்ட மக்கள் பெறுவர். ரயில்வே நிர்வாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஜிகே. வாசன் தெரிவித்தார்.