1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Alagesan
Last Updated : வெள்ளி, 16 டிசம்பர் 2016 (22:47 IST)

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிலை திறப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் சிலை திறக்கப்பட்டுள்ளது.

 
தமிழக மக்களை மிகவும் பாதித்த செயல் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு. இவரின் இறுதிச்சடங்கிற்கு லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அவர் மீதான பற்றை வெளிக்காட்டினர். இப்படி இருக்க தமிழகத்தில் இதுவரை ஒரு ஜெயலலிதா சிலை கூட திறக்கபடவில்லை.
 
இந்நிலையில் புதுச்சேரி, திருக்கனூரில்,அதிமுக., பொதுக்குழுவின் உறுப்பினராக இருக்கும் டி.ஹெச். நாசர் என்பவர் ஜெயலலிதாவிற்கு முழு உருவச்சிலையை இன்று திறந்து வைத்தார்.
 
ஜெயலலிதாவிற்கான சிலையை முதலில் ஆந்திர மாநிலத்தில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.