வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (22:00 IST)

தனக்கு தானே கொரொனா வரவழைத்த பாடகி! பொதுமக்கள் விமர்சனம்

china singer
சீனாவில் பிரபல பாடகி தனக்கு தானே கொரொனா வரவழைத்துக் கொண்ட செயலுக்கு விமர்சனம் குவிந்து வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து உலக  நாடுகளுக்கு கொரொனா பரவியது.
இந்த ஆண்டு ஓரளவு கொரொனா தாக்கம் குறைந்த நிலையில், தற்போது, மீண்டும் சீனா, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது.

இந்த  நிலையில், சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸான பிஎஃப்-7 ஒமைக்கான்  பரவலாம் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சீனாவின் பிரபல பாடகி ஜேன் ஜாங்(38), வரும் புத்தாண்டிற்கு இரவு இசை நிகழ்ச்சி  நடத்த திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தனக்கு கொரோனா பாதிக்குமோ என்று கருதி, கொரொனா பாதிப்பில் உள்ள தன்  நண்பர்களை நேரில் சென்று பார்த்துள்ளார்.

இதற்கு சீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.