திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 22 ஏப்ரல் 2023 (21:37 IST)

தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்துக் கொன்ற நாய்கள்

dogs
ஆந்திராவில் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் மேட்டவலசா பகுதியில் வசிப்பவர் ராம்பாபு. இவர், சாலையோரம் டிபன் கடை  நடத்தி வருகிறார்.இவரது மனைவி மகாலட்சுமி. இத்தம்பதியர்க்கு குசுமா மற்றும் சாத்விகா(1 வயது) என்ற குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று மாலை மகாலட்சுமி வீட்டிற்கு வெளியே உள்ள கட்டிலில்,சாத்வீகாவைத் தூங்க வைத்தார்.

அப்போது, மகாலட்சுமி வீட்டிற்குள் சென்று சமையல் செய்து கொண்டிருக்கும்போது, மூத்த மகள் குசுமா தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்பகுதியில் வெளியில் சுற்றிக் கொண்டிருந்த நாய்கள் கூட்டம்  குழந்தை சாத்வீகா அருகில் வந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கட்டிலில் இருந்து இழுத்துச் சென்று, ஒரு தோப்பில்வைத்து கடித்துக் குதறின.

குழந்தையின் அழுகுறல் கேட்டு அருகில் இருப்பவர்கள் வந்து சாத்வீகாவை  நாய்கள் கடிப்பதைப் பார்த்து அதிர்ந்துபோய் நாய்களை விரட்டிவிட்டு, சாத்விகாவை மீடடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால, சிகிசை பலனின்றி குழந்தை உயிரிழந்தது, இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதது.