செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 10 ஜனவரி 2024 (10:25 IST)

துணை மேயர் வீட்டை அடித்து நொறுக்கிய ரவுடிகள்! – கோவையில் களேபரம்!

Coimbatore
மாநகராட்சியின் துணை மேயர் நாகராஜன் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றை அடித்து நொறுக்கிய இரண்டு ரவுடிகளால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 
மதுரை மாநகராட்சியின் துணை மேயர் நாகராஜன் மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவில் வசித்து வருகிறார்.

இந் நிலையில் துணை மேயர் நாகராஜன் மற்றும் அவரது மனைவி செல்வராணி ஆகியோர் இல்லத்தில் இருந்தபோது, திடீரென வந்த மர்ம நபர்கள் இருவர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து துணை மேயரின் வீட்டு வாசலில் இருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதோடு, மேலும் ஜெய்ஹிந்துபுரம் பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி துணை மேயரின் அலுவலகம் முன்பக்க கண்ணாடிகள் முற்றிலுமாக அடித்து நொறுக்கினர்

 
இச் சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் துணை மேயர் வீட்டு வாசலில் ரகளையில் ஈடுபட்ட இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது