வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (10:36 IST)

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. ஆனால் மழை பெய்தால்..? - நிபந்தனை விதித்த வனத்துறை!

sathuragiri

சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷம், பௌர்ணமியை முன்னிட்டு தரிசனத்திற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

 

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலில் மாதம்தோறும் பிரதோஷம், பௌர்ணமி நாள் வழிபாட்டிற்காக பக்தர்கள் மலையேறி செல்ல வனத்துறையால் அனுமதிக்கப்படுகிறார்கள். சமீப காலமாக சதுரகிரிக்கு மலையேற வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நாளை சனி பிரதோஷம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் இந்த மாதமும் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக நாளை 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது வனத்துறை. 
 

 

ஆனால் மலையேற அனுமதிக்கப்படட் நாட்களில் எதிர்பாராத விதமாக மழை பெய்யும் சூழலில் பாதுகாப்பு காரணங்களுக்காக மலையேற்ற அனுமதி ரத்து செய்யப்படும் என்ற நிபந்தனையையும் வனத்துறை விதித்துள்ளது. மேலும் பக்தர்கள் எரியக் கூடிய பொருட்களை எடுத்து செல்லவும், இரவு நேரத்தில் மலையில் தங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K