1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (22:25 IST)

மாணவனின் உயிரைக் காப்பாற்றிய செவிலியர் !

சாலை விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாணவனின் உயிரைக் காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மன்னார்குடி அருகே இன்று சாலை விபத்தில் காயமடைந்த மாணவனுக்கு அந்த வழியே சென்றா அரசு மருத்துவமனை செவிலியர் வனஜா துரிதமாகச் செயல்பட்டு மாணவனுக்கு CPR சிகிச்சை செய்து அவரது உயிரைக் காப்பாற்றினார். அதன்பின்னர், மாணவன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.  

மாணவனின் உயிரைக் காப்பாற்றிய வெவிலியர் வனஜாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.