1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 8 மே 2020 (16:56 IST)

மதுபோதையில் கிணற்றுக்குள் விழுந்த வாலிபர்..

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறதுஇதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்டது.

எனவே, இன்று ஒரேநாளில் மது விற்பனை ரூ. ரூ.160 கோடிக்கு மேல் வசூலானதாக  தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் மதுகுடித்த வாலிபர் ஒருவர் போதையில் கண் மண் தெரியாமல் ஒரு கிணற்றுக்குள் விழுந்துள்ளார். அதன்பிறர் கூச்சல் எழுப்பவே, சிலர் அதைப் பார்ஹ்ட்து காவல்த்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், அவரைப் பத்திரமாக மேலே வரச் செய்தனர். மேலே வந்த வாலிபரிடம் கேள்வி கேட்ட போலீஸார், அவரைக் கன்னத்தில் ஓங்கிப் பளார் என்று ஒரு அறைவிட்டு அவரது போதையைத் தெளியச் செய்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.