செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 15 ஜூன் 2020 (19:41 IST)

விழியுங்கள் முதல்வரே…மக்கள் பசியுடனும், நோயுடனும் போராடுகிறார்கள் – உதயநிதி டுவீட்

தமிழகத்தில்  நாள் தோறும் கொரோனாவால்  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிக்கரித்து வருகிறது.  இந்நிலையில்  எதிர்க்கட்சி தலைவரின் மகனும் நடிகருமான  உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

மக்களின் அறியாமையால் ஆட்சிக்கு வந்த ஒருவர்; அவர்கள் அறியாமலேயே ஆட்சிக்கு வந்த இன்னொருவர். இந்த சர்வாதிகாரி-காரியவாதி காம்பினேஷனுடன் கொரோனாவும் கூட்டுசேர, மக்கள் பசியுடனும், நோயுடனும் போராடுகிறார்கள். தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்புவது கடினம். இருந்தாலும் முயல்கிறோம் #WakeUpEPS என்று தெரிவித்துள்ளார்.