திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (13:50 IST)

பைக் ரேஸில் ஈடுபட்டவருக்கு நூதன தண்டனையை வழங்கியது உயர்நீதிமன்றம்!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் அவஸ்தை குறித்து நேரில் பார்த்து தெரிந்து கொள்ளும் விதமாக வார்டு பாய்க்கு  உதவியாக பணியாற்ற பைக் ரேஸில் ஈடுபட்டவருக்கு நூதன தண்டனையை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
அதன்படி, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் காலை 8 மணி மதியம் 12 வரை ஒரு மாதம் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பைக் ரேஸில் ஈடுபட்டு கைதான இளைஞர் பிரவீனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.