ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 அக்டோபர் 2024 (12:26 IST)

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்! - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்!

KKSSR Ramachandran

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 

இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இடைக்காலத்தில் தொடங்க உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

இந்நிலையில் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆய்வுகளை மேற்கொண்டார்.
 

 

பின்னர் பேசிய அவர் “பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. வரும் 15 முதல் 17 வரையிலான தேதிகளில் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

 

தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். பால், குடிநீர் உள்ளிட்ட உணவு பொருட்களை மழைக்கு முன்பாகவே தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 60 ஆயிரம் தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு உதவ தயாராக உள்ளனர். நீர் நிலைகளை கண்காணித்து வருவதோடு 24 மணி நேரம் செயல்படும் மாநில அவசரக்கால செயல்பாட்டு மையமும் மக்களுக்கு உதவ காத்திருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K