வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2024 (08:54 IST)

இன்றைக்கும் காத்திருக்குது செம மழை! 4 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

Rain

நேற்று முதலாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இன்றும் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

மேற்கு காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக அக்டோபர் 1 வரை தமிழகத்தின் பல பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மாலை முதல் விடிய விடிய சென்னையின் பல பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

 

இந்நிலையில் இன்றும் காலை முதலே 4 மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K