1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 16 ஜனவரி 2019 (17:51 IST)

’நரி ஜல்லிக்கட்டு’க்கு தடை விதிக்க வேண்டும் - பீட்டா கடிதம்

பொங்கல் பண்டிகையின் போது வழக்கமாக காணும் பொங்கல் தினத்தன்று நரி ஜல்லிக்கட்டு நடத்தப்படும். பொதுவாக இந்த நிகழ்ச்சி ஆத்தூர், வாழப்பாடி அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பொங்கல் பண்டிகையை சிறப்பிக்க ஜல்லிக்கட்டு விழா நடத்துவார்கள்.
அதாவது நரி ஜல்லிக்கட்டு பொங்கல் விழாவில் நடத்தினால்தான் அந்த வருடம் முழுக்க விவசாயம் செழிப்பாக  இருக்கும் என்று வங்கா நரிகளை பிடித்து வந்து மக்கள் திரளாக கலந்து கொண்டு இந்த விழாவை நடத்துவார்கள்.
 
இந்நிலையில் தமிழக வனத்துறையின் தலைமை வனவிலங்கு பாதுகாவலருக்கு பீட்டா கடிதம் எழுதியுள்ளது. அதில் நரி ஜல்லிக்கட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
 
1972 ஆம் ஆண்டு சட்டப்படி வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்ப்டி  வங்காநடி பட்டியல் 2 ல் வருவதால் அதனை அதனை பிடித்து வந்து ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு முன்னதாக நரி ஜல்லிக்கட்டு தமிழக கலாச்சாரத்தில் வருகிறதா ..? என்ற தகவலை ஆர்டிஐ மூலம் தமிழக அரசிடம் பீட்டா அமைப்பு கேட்டுள்ளது. அதற்கு நரி ஜல்லிக்கட்டு தமிழக கலாசாரத்தின் ஒரு பகுதி அல்ல என்று பதில் கிடைக்கவே கலாச்சாரத்தில் இல்லாத ஒன்றினை பழக்கப்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று பீட்டா தனது கடிதத்தில் கூறியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.