வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 15 ஜனவரி 2019 (12:18 IST)

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; சீரிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 14 பேர் காயம்

மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றவை. ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக கடந்த ஒரு வாரமாக முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வந்தனர். அவனியாபுரத்தில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டில் 636 காளைகளும் 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்ற்றுள்ளனர். 1000க்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
ஜல்லிக்கட்டை முன்னிட்டு மருத்துவக் குழு, கால்நடை மருத்துவக் குழு, மேலும் காயம் ஏற்படுபவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. 
 
இந்நிலையில் இந்த போட்டில் பங்குபெற்ற 14 மாடுபிடி வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்ட சக வீரர்கள் அவர்களை அங்கிருக்கும் மருத்துவர்கள் குழுவிடம் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.