1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (11:22 IST)

கிரேன் சக்கரத்தில் தவறி விழுந்து விபத்து! - கணவன் கண் முன்னே மனைவி பலி!

Accident
இருசக்கர வாகனத்தில் சென்றபோது க்ரைன் மீது மோதியதில் சக்கரத்தில் சிக்கி கணவன் கண் முன்னே மனைவி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆவுடைபொய்கை அருகே கேரளா வைத்தியசாலை ஒன்று உள்ளது இங்கு  முறையூரில் பெட்டிக்கடை வைத்து உள்ள நாச்சியப்பன் என்பவரின் மனைவி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஞ்சலகத்தில் பணிபுரிந்து வரும் வளர்மதிக்கு சிகிச்சை பார்த்து வருகின்றனர் இந்நிலையில் காரைக்குடி பகுதியில் லேசான மழை பெய்து வரும் பொழுது கணவன் நாச்சியப்பன் உடன் வளர்மதி இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது மழை பெய்ததால் பொழுது தங்கம் திருமண மண்டபம் அருகே மழைக்கு ஒதுங்கி உள்ளனர்.

மழை நின்ற பின்பு நாச்சியப்பன் இருசக்கர வாகனத்தை எடுத்து திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வண்டியை ஏற்றும்பொழுது அப்பகுதியில் வேகமாக வந்த க்ரைன் மீது இருசக்கர வாகனம் லேசாக உரசியதில் பின்னால் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தார் வளர்மதி கிரேன் சக்கரத்தில் விழுந்து கணவன் கண் முன்னே பலியானார் விபத்து குறித்து குன்றக்குடி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.