செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 7 ஜூன் 2023 (17:03 IST)

அரசியல் அனாதையாக அண்ணாமலை நிற்பார்.. எஸ்வி சேகர் பேட்டி..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு வருவதாக பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அண்ணாமலை ஒருநாள் அரசியல் அனாதையாக நிற்பார் என பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில மாதங்களாகவே அண்ணாமலை மற்றும் எஸ்வி சேகர் இடையே கருத்து மோதல் இருந்து வருவதாக கூறப்பட்டது. சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட அண்ணாமலை, எஸ்வி சேகர் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 
 
இந்த நிலையில் முன்னணி இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த எஸ்வி சேகர், ‘பாஜகவை காவல் நிலையம் போல நடத்த அண்ணாமலை ஆசைப்படுகிறார் என்றும் எதிராளியின் தலையை சீவாமல் உடன் வருபவர்களின் தலையை சீவி வருகிறார் என்றும் இப்படியே போனால் அவர் அரசியலில் அனாதையாக தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். 
 
கட்சியில் இருந்து என்னை பிரச்சாரத்திற்கு கூட அழைப்பதில்லை என்றும் ஆனால் அதனால் எனக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva