வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 13 ஜனவரி 2018 (12:48 IST)

பாஜக ஒரு கீழ்த்தரமான கட்சி; திருமுருகன் காந்தி கடும் விமர்சனம்

கவிஞர் வைரமுத்து குறித்து ஹெச்.ராஜாவின் கீழ்த்தரமான பேச்சுக்கு தற்போது வரை அந்த கட்சி எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.
மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி  திருப்பூரில் இஸ்லாமியர்களின் சார்பில் மத்திய பாஜக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, இஸ்லாமிய மக்களின் அடிப்படை உரிமைகள் மீதே கை வைக்கும் போக்கை பாஜக அரசு கடை பிடித்து வருவதாக கூறினார். இத்தனை ஆண்டுகாலமாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத உச்சநீதிமன்றம், இன்றைக்கு முத்தலாக் விவகாரத்தை மட்டும் ஏன் இவ்வளவு அவசரமாக கையிலெடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். தமிழர்களுக்கு விரோதமாக பாஜக செயல்பட்டு வருவதாக திருமுருகன் காந்தி குற்றம் சாட்டினார். 
ஆண்டாள் குறித்த கருத்திற்காக கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்த போதும், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வைரமுத்துவை தரக்குறைவாக பேசியிருக்கிறார். அவருடைய கீழ்த்தரமான பேச்சுக்கு தற்போது வர அந்த கட்சி எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை. இதன் மூலம் பாஜக மிக கீழ்த்தரமான கட்சி என்பது பொதுமக்கள் முன்பாக அம்பலமாகியுள்ளது. நோட்டாவைவிட குறைவான வாக்குப் பெற்ற இக்கட்சி, நாட்டின் அனைத்து தளங்களிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்த நினைக்கிறது. ஆனால் பாஜக வின் அத்தகைய நினைப்பு தமிழகத்தில் ஒரு போதும் நிகழாது என திருமுருகன் காந்தி ஆவேசத்துடன் கூறினார்.
 
சென்னை மெரினா போராட்டம், இலங்கை இறுதிப்போரின் போது தமிழினத்தை காக்க உயிர் நீத்த தமிழர்களுக்கு மெரினாவில் அஞ்சலி செலுத்த முயன்றது, மேலும் மத்திய மாநில அரசை தொடர்ந்து விமர்சித்து உள்ளிட்ட பல காரணங்களால் திருமுருகன் காந்தி மற்றும் மே 18 இயக்கத்தை சார்ந்த சிலர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.