திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (21:27 IST)

இன்று முதல் பிளக்ஸ் பேனர்களுக்கு தடை: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

banner
இன்று முதல் பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்படுவதாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
விசாகப்பட்டினம் கடற்கரையை அழகு படுத்தும் கடற்கரையாக மேம்படுத்தும் திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசினார்
 
அப்போது ஆந்திராவில் இன்று முதல் பிளக்ஸ் பேனர்களுக்கு  தடை என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இதனையடுத்து ஆந்திராவில் இனி எந்த பகுதியிலும் பிளாக் பேனர் வைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தடையை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர அரசு எச்சரித்துள்ளது. இதனை அடுத்து ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 
 
ஆந்திராவை போலவே தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பிளக்ஸ் பேனர்கள் தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர் மற்றும்