செல்போன் பறிகொடுத்தவருடன் கூலாக பேரம் பேசிய திருடன்

Last Modified வெள்ளி, 11 அக்டோபர் 2019 (20:17 IST)
செல்போன் திருடன் ஒருவன் அந்த செல்போன் உரிமையாளரிடம் கூலாக பேரம் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது

செல்போனையும் பணத்தையும் திருடிய ஒரு திருடன் இந்த செல்போன் பறிகொடுத்தவர் போன் செய்தபோது செல்போனை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றால் ஆறாயிரம் ரூபாய் தரவேண்டும் என்று பேரம் பேசியுள்ளார்

உனக்கே நியாயமாக இருக்கின்றதா, ஏற்கனவே 16 ஆயிரம் ரூபாயை திருடி கொண்டு சென்ற நீ,
செல்போனுக்கும் பணம் கேட்கிறாயே என்று செல்போனை பறிகொடுத்தவர் கேட்டதற்கு ’நான் என்ன செய்வது எனக்கு பணம் தேவை இருக்கிறது அதனால் கேட்கிறேன் என்று கூலாக திருடன் கூறியுள்ளான்

மேலும் செல்போனை பறிகொடுத்தவர் பணத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுமாறு பேரம் பேச அதன்பின் 5000 ரூபாய் கொடுத்து விட்டு செல்போனை வாங்கிக் கொள் என்று கூறுவது அந்த ஆடியோவில் உள்ளது

செல்போனையும் பணத்தை திருடியது மட்டுமின்றி செல்போனை திருப்பிக் கொடுக்க கூலாக பேரம் பேசிய திருடனின் இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :