1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 24 மார்ச் 2020 (16:48 IST)

’யூடியூப் பிரபலத்துக்கு ‘ எதிராக புகார் செய்த நடிகை கஸ்தூரி !

’யூடியூப் பிரபலம்’ பிரசாந்துக்கு எதிராக புகார் செய்த நடிகை கஸ்தூரி !

 

பிரபல நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரி சமூக வலைதளங்களில் எப்போதும், ஆக்டிவ்வாக இருப்பவர். இவர், பிரபல யூடியூப் பிரபலம் மற்றும் சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமிக்கு எதிராக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுகுறித்து ஒரு விவாதம் ஒரு தனியார் செய்தி சேனலில் நடைபெற்றது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டார். இதற்கு, ஒரு நபர் அநாகரிகமான முறையில்  அவருக்கு ரீடுவீட் செய்தார். அதற்கு நடிகை கஸ்தூரி ஒரு பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில், பிரபல யூடுயூப் பிரபலம் பிரசாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கஸ்தூரி ரிப்ளை செய்த டுவீட்டை ஸ்கீரின் சாட் எடுத்து,  கஸ்தூரியின் மகள் குறித்து அநாகரிகமான முறையில் ஒரு  டூவீட் பதிவிட்டுள்ளார்.

அந்த டுவீட்டைப்  பார்த்த  நடிகை கஸ்தூரி, என் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது… பிரசாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டுவிட்டர் இந்தியா மற்றும் சென்னை போலீஸுக்கு அந்த டுவீட்டை டேக் செய்துள்ளார்,