மவுஸ் குறைந்ததால் பழைய காதலருடன் பேட்ச் அப் செய்யும் புஷ் புஷ் நடிகை!

papiksha| Last Updated: செவ்வாய், 24 மார்ச் 2020 (08:54 IST)

தமிழ் சினிமாவின் ஹேண்ட்சம் ஹீரோவுடன் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமான அந்த புஷ் புஷ் நடிகை குறுகிய காலத்திலேயே பரவலாக பேசப்படும் நடிகையாக வளர்ந்து வந்தார். அதையடுத்து கொஞ்சும் தமிழில் அழகிய புன்னகையுடன் தமிழ் சினிமா ரசிகர்களை வளைத்து போட்டார்.

வளர்ச்சி உச்சத்தை எட்டும் நேரத்தில் காதல் என்ற பெயரில் தன் தலையில் தானே மண்ணு வாரி போட்டுக்கொண்டார். வாரிசு நடிகர் ஒருவருடன் நடித்து வந்தபோது அந்த மன்மதனின் வலையில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து அந்த நடிகரை பற்றிய வண்டவாளத்தை புஷ் புஷ் நடிகையின் காதில் ஊதி காதலை குழி தோண்டி புதைத்து விட்டனர் கோடம்பாக்கத்தினர்.

இதையடுத்து தற்போது அந்த நடிகை இருக்கும் இடமின்றி அடையாளம் தெரியாமல் மறைந்து வருகிறார். ஆனால், அந்த மன்மத நடிகரோ இன்னும் பீக்கில் தான் இருக்கிறார். இதனால் மீண்டும் தன் காதலை அதே நடிகருடன் புதுப்பிக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறாராம் அந்த புஷ் புஷ் நடிகை. இதற்கு அந்த நடிகர் ஓகே பண்ணனுமே...


இதில் மேலும் படிக்கவும் :