கையில் வில், அம்பு; மரண மாஸ் மாஸ்டர்! – கடைசி போஸ்டர் வெளியானது!

Master
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (15:24 IST)
நாளை திரையரங்குகளில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதன் கடைசி போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் மாஸ்டர். கடந்த ஆண்டே வெளியாகவிருந்த படம் தற்போது பொங்கலை முன்னிட்டு நாளை வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோ காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் வெளியானது சர்ச்சையை கிளப்பியது.

இதுகுறித்து பதிவிட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் லீக்கான காட்சிகளை ஷேர் செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் புதிய மற்றும் கடைசி போஸ்டரும் வெளியாகியுள்ளது. இதில் இதுவரையிலான போஸ்டர்களில் இல்லாத வகையாக விஜய் கையில் வில், அம்புடன் இருப்பது போன்ற போஸ் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :