செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (17:41 IST)

காவிரி கரையோர பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை

கல்லணையில் இருந்து 7000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிகை விடுத்துள்ளார்.


 

 
நேற்று முதல் கல்லணையில் இருந்து 7,000 கனஅடி தண்ணீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், காவரி ஆற்றங்கரை ஓரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 
 
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
காவிரி மஹா புஷ்கரம் விழாவை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியில் புனித நீராடும் பக்தர்களும், கவனத்துடனும், பாதுகாப்புடனும் இருக்கமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.