ஆடி வெள்ளி: கரூர் மாரியம்மன் ஆலயத்தில் தங்கத்தேர் இழுத்த பக்தர்கள்

karur temple
Last Modified சனி, 11 ஆகஸ்ட் 2018 (15:07 IST)
கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளியை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.முன்னதாக அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் மின் விளக்குகளாலும், பல்வேறு வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு, தங்கத்தேரில் காட்சியளித்தார். மேலும், தங்கத்தேரோட்ட நிகழ்ச்சியினை முன்னிட்டு, பக்தர்கள் கோயிலை சுற்றி தங்கத்தேரினை வடம்பிடித்து இழுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு, அருள்மிகு ஸ்ரீ கரூர் மாரியம்மன் அருள் பெற்றனர்.

தேரோட்ட வீடியோவை காண க்ளிக் செய்யவும்

சி.ஆனந்தகுமார்


இதில் மேலும் படிக்கவும் :