1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 20 ஜூலை 2024 (15:59 IST)

பாஜகவில் இணைந்தாலும், தினகரன் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்: தங்கதமிழ்ச்செல்வன்

Thanga Tamilselvan
டிடிவி தினகரன் பாஜகவில் இணைந்ததற்கு முக்கிய காரணம், ஃபெரா வழக்கு, இரட்டை இலை சின்ன வழக்கு ஆகியவை தான் என்று தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
 
தேனி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்குக்ம் கூட்டத்தில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் அதன்பின் செய்தியாளர்களிடம் சந்தித்தார். அப்போது டிடிவி தினகரன் ஆரம்பத்தில் பாஜகவை எதிர்த்து பயங்கரமாக அரசியல் செய்தார். ஆனால், தற்போது அந்தர் பல்டி அடித்து கூட்டணியில் இணைந்துள்ளார். விரைவில் தனது கட்சியை பாஜகவில் சேர்த்துவிடுவார்.
 
பாஜக-வுடன் தன்மானத்தை இழந்து டிடிவி தினகரன்  சேர்ந்ததற்கு முக்கிய காரணம், ஃபெரா வழக்கு, இரட்டை இலை சின்ன வழக்கு என இரு வழக்குகள் தான். இந்த வழக்குகளில் இருந்து அவர் விடுபட முடியாது. பாஜகவில் இணைந்தாலும் அவர் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.
 
சசிகலா எதற்கு சுற்றுப் பயணம் செய்கிறார் என தெரியவில்லை, அது அவர் கட்சிக்குள் உள்ள பிரச்னை, சுற்றுப்பயணம் மேற்கொள்ளட்டும் என்ன நடக்கிறது என பார்க்கலாம் என்று கேள்வி ஒன்றுக்கு தங்கதமிழ்ச்செல்வன் பதிலளித்தார்.
 
Edited by Mahendran