1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 25 ஜனவரி 2019 (08:11 IST)

ஓயாமல் பாஜகவை வம்பிழுப்பது ஏன்? மனம்திறந்த தம்பிதுரை

பாஜகவை விமர்சிப்பது ஏன் என்பது குறித்து அதிமுக எம்.பியும் மக்களவை மக்களவை துணை தலைவருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
 
சமீபகாலமாக பாஜக குறித்தும் மோடி குறித்தும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அதிமுக முக்கிய தலைவரும் மக்களவை துணை தலைவருமான தம்பிதுரை. அதிமுகவில் இருந்துக்கொண்டு இவர் மட்டும்தான் பாஜகவை அடிக்கடி விமர்சித்து வருகிறார். 
 
இதோடு மட்டுமல்லாமல் கட்சிக்குள் உள்ள அதிருப்தி காரணமாக தம்பிதுரை அதிமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி துவங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. 
 
இந்நிலையில் இதற்கு இதற்கு விளக்கமளித்துள்ள தம்பிதுரை, பாஜகவின் கொள்கைகள் சில சரியாக இல்லாததால் தான் பாஜகவை விமர்சிக்கிறேன்.  அதிமுகவின் எம்எல்ஏக்களை பாஜக கிள்ளுக்கீரை போல் நினைக்கிறது. எங்கள் கட்சி நபர்களை பாஜகவினர் ஒழுங்காக நடத்துவதில்லை. அதனால் தான் அவர்களை விமர்சிக்கிறேன்.
 
நான் பாஜகவை விமர்சிப்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இது அதிமுகவின் கருத்தல்ல, எனது கருத்தை நான் கூறினேன் என்றார்.