திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2017 (12:26 IST)

ஆளுநரை சந்தித்த பின் எடப்பாடியை சந்தித்த தம்பிதுரை: கேட்டால் நட்பு ரீதியான சந்திப்பாம்!

ஆளுநரை சந்தித்த பின் எடப்பாடியை சந்தித்த தம்பிதுரை: கேட்டால் நட்பு ரீதியான சந்திப்பாம்!

அதிமுகவின் இரு அணிகளும் இணைய குழு அமைக்கப்பட்டு விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதற்காக சசிகலா குடும்பத்தையே கட்சியில் இருந்து ஒத்துக்கி வைத்துவிட்டது அதிமுக அம்மா அணி. இந்த பரபரப்பான சூழலில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று ராஜ்பவனில் சந்தித்து பேசினார்.


 
 
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேர்ந்தால் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா, ஓபிஎஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்பாரா இல்லை எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நீடிப்பாரா என்ற சந்தேகம் இருந்து வருகிறது.
 
எனவே தம்பிதுரையின் ஆளுநருடனான இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பாக பார்க்கப்பட்டது. ஆனால் ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது ஆளுநர் எனது நீண்டகால நண்பர், நட்பு ரீதியிலான சந்திப்பு தான் இது, இந்த சந்திப்பின் போது அரசியல் நிலவரம் குறித்து பேசவில்லை என வழக்கமாக அரசியல்வாதிகள் கூறுவது போல் கூறிவிட்டு சென்றுவிட்டார்.
 
ஆளுநரை சந்தித்த பின்னர் தம்பிதுரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்தித்து பேசியுள்ளார். இதனால் அரசு குறித்தும், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் ஆளுநரிடம் பேசிவிட்டு பின்னர் ஆளுநர் கூறியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சமியிடம் தெரிவிக்கவே தம்பிதுரை சென்றிருக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. நட்பு ரீதியிலான சந்திப்பு என தம்பிதுரை கூறியது உண்மையில்லை எனவும் முக்கியமான அரசியல் விவகாரம் இதில் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.