1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 27 மார்ச் 2018 (19:05 IST)

வாழ்க்கையே ஒரு சப்பை போலதான்: தம்பி ராமையா

கரூர் வெங்கமேட்டில் உள்ள தனியார் பள்ளியின் 25 வது ஆண்டு விழாவினையொட்டி, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன், அ.தி.மு.க நிர்வாகியும், நெரூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவருமான மணிவண்ணன் மற்றும் திரைப்பட இயக்குநரும், நடிகருமான தம்பி ராமையா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய தம்பி ராமையா, தற்போது சினிமா ஸ்ட்ரைக் நடைபெற்று வருகின்றது. ஆகையால் எனது (தம்பிராமையா) மகனை வைத்து கதை, திரைக்கதை, வசனம் அமைக்கும் பணி சென்று கொண்டுள்ளதாகவும், சிந்திக்கும் சிந்தனையெல்லாம் நல்லவையாகவும், சந்திக்கும் நண்பர்களை நல்லவர்களாக அமைய கடவுளை தான் பிரார்த்திப்பதாகவும் கூறினார்.



மேலும் அவர் பேசுகையில் வாழ்க்கையே ஒரு ஐஸ் கிரீம் மாதிரி, வாங்கி சுவைத்துக் கொண்டே இருந்தால் காணாமல் போய்விடும், ஆனால் எதுவுமே செய்யாமல் பார்த்துக் கொண்டே சென்றால் அது காணாமல் போய் உருகி விடும் என்றும், மேலும் வாழ்க்கையே, ஒரு சிகரெட் பாக்கெட் மாதிரி போல், புகைச்சுக்கிட்டே இருந்தால் புகையாய் போய் விடும், சிகரெட்டை பிடிக்காவிட்டால் சாம்பாலாய் போய் விடும் என்றதோடு, வாழ்க்கையே ஒரு சப்பை என்றார்.
 
சி.ஆனந்தகுமார், கரூர்