ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 11 அக்டோபர் 2018 (23:02 IST)

வைரமுத்துவுக்கு வக்காலத்து வாங்கிய சுபவீரபாண்டியனுக்கு தாமரை பதிலடி

வைரமுத்து மீது ஒரு பெண் அதிலும் புகழ்பெற்ற பாடகி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியிருக்கும் நிலையில் அதனை நடுநிலையில் அணுகாமல், வைரமுத்துவுக்கு ஆதரவாக சுப.வீரபாண்டியன் ஒரு டுவிட்டை பதிவு செய்தார். அது 'இன்ஸ்பெக்டர் ஒரு புகார் கொடுக்க வந்திருக்கேன்’ ‘தப்பு நடந்து 14 வருஷம் ஆச்சா’ என்ற டுவீட். இந்த டுவிட்டை பார்த்த நெட்டிசன்கள் சுபவீ-ஐ அடித்து துவைத்து தொங்கப்போட்டதால் அதிர்ச்சி அடைந்து ஒருசில நிமிடங்களில் அதனை டெலிட் செய்துவிட்டார்.

இந்த நிலையில் பாடலாசிரியர் தாமரை அவர்கள் சுப.வீரபாண்டியன் குறித்து தனது ஃபேஸ்புக்கில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவால் சுப.வீரபாண்டியனின் உண்மை முகம் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. கவிஞர் தாமரையின் பதிவு இதுதான்:


இன்னுமா இந்த சுபவீயையெல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். தியாகுவும் சுபவீயும் தமிழ்தமிழர் இயக்கத்தில் பொ.செயலாளர், தலைவர் என ஒன்றாக பொழுதுபோக்கிக் கொண்டிருந்தார்கள். தியாகு நடத்திய பாலியல் வக்கிரங்களுக்கெல்லாம் அன்னார்தான் சாட்சி. மறைப்பது, மாற்றுவது, திரிப்பது, தூற்றுவது எல்லாம் கைவந்த கலை இரண்டு பேருக்கும்... இயக்கத்தின் பெயரால் இரண்டுபேரும் நடத்திய அழிச்சாட்டியங்களுக்கெல்லாம் நானே வாழும்சாட்சி

இவ்வாறு கவிஞர் தாமரை தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். ஆனால் இந்த பதிவும் டெலிட் செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.