புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 12 மே 2022 (20:52 IST)

தாம்பரத்தில் உள்ள கடையில் பயங்கர தீ விபத்து..

Fire
சென்னை தாம்பரத்தில் உள்ள கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

தாம்பரம் கெளரிவாக்கத்தில் உள்ள 3 மாடி கொண்ட கடையில் இன்று 7:30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.  3 தளங்களில்  தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

தீயை அணிக்க தாம்பரம்- மேடவாக்கத்திலுள்ள தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கப் போராடி  வருகின்றனர்.

மேலும், தாம்பரத்தில் இருந்து மேடவாக்கம் செல்லு வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.