வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2024 (08:49 IST)

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்: வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த தமிழக அரசு..!

TN assembly
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியாகியுள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகள் இதோ:

* உங்களை தேடி, உங்கள் ஊரில்' முகாம் ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை நடத்தப்பட வேண்டும்.

* ஜனவரி முதல் டிசம்பர் வரை ஆண்டு முழுவதும் அனைத்து தாலுகாக்களும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில், ஆண்டின் தொடக்கத்தில் ஒரு ஆண்டிற்கான அட்டவணையை மாவட்ட ஆட்சியர் வரைய வேண்டும்.

* கூட்ட நெரிசலைத் தவிர்க்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அலுவலர்கள், நிலுவையில் உள்ள மனுக்களை உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* உங்களை தேடி, உங்கள் ஊரில்' முகாம்கள் நடத்துவது குறித்த அறிக்கையை ஒவ்வொரு மாதம் 5ம் தேதிக்கு முன், கூடுதல் தலைமைச் செயலர்/வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தனது அரசாணையில் தெரிவித்துள்ளது.

Edited by Siva