1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 5 அக்டோபர் 2023 (11:52 IST)

திமுகவை எதிர்த்து 40 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்: ஆசிரியர்கள் அறிவிப்பு..!

திமுகவை எதிர்த்து 40 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என  ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி  பெற்றோர் நல சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கையை அரசு இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அதுமட்டுமின்றி உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களை கைது செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்களையும் கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

இந்த நிலையில்  வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக நிற்கும் 40 தொகுதிகளிலும் ஆசிரியர்களை நிறுத்தப் போகிறோம் என்றும் நேரடி தேர்தல் களத்தில் சந்தித்து எங்கள் பலத்தை காட்டுவோம் என்றும் 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva