1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 13 டிசம்பர் 2019 (13:55 IST)

பிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள்! – கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவரை தண்டிப்பதற்காக அவரது பிறப்புறுப்பை ஆசிரியர்கள் பிடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூ அருகே உள்ள சூலூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 11ம் வகுப்பு படித்து வரும் மாணவர் செல்போன் கொண்டு வந்ததாகவும், ஆசிரியர்கள் கட்டளைக்கு கீழ்படியாமல் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அந்த மாணவரை கண்டிக்க திட்டமிட்ட ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஒரு அறைக்கு அந்த மாணவரை அடைத்து அவரது பிறப்புறுப்பை துன்புறுத்தியுள்ளனர். வேதனை தாங்காமல் துடித்த மாணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.