திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2023 (08:50 IST)

ஆசிரியர்களை தொடர்ந்து செவிலியர்களும் போராட்டம்! – சென்னையில் பரபரப்பு!

Nurses Protest
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது செவிலியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



தமிழ்நாட்டில் திமுக அரசு நடந்து வரும் நிலையில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவார காலமாக தொடர்ந்து இந்த போராட்டம் ஆசிரியர்களை கைது செய்து கலைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஃப் இந்நிலையில் தற்போது செவிலியர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். எம் ஆர் பி தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர் பணியிடங்களை நிரந்தரமாக்குவது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Edit by Prasanth.K