வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (19:37 IST)

பிக் பாஸ்கெட் பங்குகளை வாங்கும் டாடா நிறுவனம்: எத்தனை கோடி தெரியுமா?

பிக் பாஸ்கெட் பங்குகளை வாங்கும் டாடா நிறுவனம்
இந்தியாவில் பிளிப்கார்ட், அமேசான் ஆகிய இரண்டு ஆன்லைன் மூலம் பொருட்களை வினியோகம் செய்யும் நிறுவனம் இருக்கும் நிலையில் பிக் பாஸ்கெட் நிறுவனம் அந்த நிறுவனத்திற்கு இணையாக வியாபாரம் செய்து வருகிறது 
 
இந்த நிலையில் பிக் பாஸ்கெட் நிறுவனத்தின் 68 சதவீத பங்குகளை டாட்டா நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் டாடா நிறுவனம் 9,500 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாகவும் செய்திகள் கூறியுள்ளது 
 
இதனை அடுத்து அலிபாபா மற்றும் அப்ராஜ் ஆகிய நிறுவனங்கள் பிக் பாஸ்கெட் நிறுவனத்தில் இருந்து விலகும் என தெரிகிறது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் டாடா நிறுவனம் இணைவதால் இதன் வியாபாரம் இன்னும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது