1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Alagesan
Last Updated : வியாழன், 24 நவம்பர் 2016 (16:42 IST)

குடிமகன்களுக்கு ஓர் நற்செய்தி - சரக்கு வாங்க காசு தேவையில்லை..

ரூபாய் நோட்டு பிரச்சனையால் டாஸ்மாக்கில் மதுபான விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. இதனை சரி செய்யும் வகையில் டாஸ்மாக் கடைகளில் டெபிட்/கிரெடிட் கார்ட்டுகளை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . 


 
 
பணப்புழக்கத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் சபரிமலை சீசன் காரணமாக டாஸ்மாக் கடைகளின் விற்பனை நாளொன்றுக்கு 12 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் வார நாட்களில் சராசரியாக 85 கோடி ரூபாய் வரையும், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 100 கோடி ரூபாய் அளவுக்கு மதுவிற்பனை இருக்கும். 
 
இந்த விற்பனை தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 12 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் டெபிட்/கிரெடிட் கார்ட் ஸ்வைப் மெஷின் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.