செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 7 நவம்பர் 2018 (08:32 IST)

தீபாவளி அன்று ரூ.330 கோடிக்கு மதுவிற்பனை: கடந்த ஆண்டு சாதனை தகர்ந்தது

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முந்தைய நாளிலும் தீபாவளி அன்றும் மதுவிற்பனை மிக அதிகமாக விற்பனையாகி வருகிறது. தீபாவளிக்கு முந்தைய நாள் மது அருந்தும் வழக்கம் பெரும்பாலானோர்களிடம் இருப்பதால் அதிக விற்பனையாகி வரும் நிலையில் இந்த ஆண்டு தீபாவளி அன்று மது விற்பனையில் சாதனை ஏற்பட்டுள்ளது.

தீபாவளி நாளான நேற்று மட்டும் தமிழகத்தில் ரூ 330 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த விற்பனை கடந்த ஆண்டு விற்பனையை விட ரூ.70 கோடி அதிகம் என்பதும் கடந்த ஆண்டு ரூ 260 கோடிக்கு மது விற்பனை ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் மது விற்பனை என்பது அரசின் சாதனை அல்ல என்றும், மது விற்பனையை படிப்படியாக குறைப்பதே மக்களுக்கு அரசு செய்யும் நன்மை என்றும், அதிக மது விற்பனை பெருமைக்குரிய ஒன்று அல்ல என்றும் சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.