1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 31 டிசம்பர் 2022 (14:06 IST)

விபத்து நேர்ந்த நேரத்தில் ரிஷப் பண்ட் இடம் திருடப்பட்டதா? காவல்துறை தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நேற்று விபத்துக்கு உள்ளான நிலையில் அவரிடம் இருந்து பணம் நகை திருடப்பட்டது என  செய்திவெளியானது
 
இந்த நிலையில் இந்த செய்தி குறித்து தற்போது உத்தரகாண்ட் மாநில காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. விபத்துக்குள்ளான பிறகு அவர் வைத்திருந்த பணம் பொருட்களை திருடி விட்டதாக செய்திகள் பரவி வருகிறது என்றும் இது முழுக்க முழுக்க ஆதாரமற்ற தவறான தகவல் என்றும் உத்தரகாண்ட் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
அவரிடம் இருந்த பிளாட்டினம் செயின், தங்க மோதிரம், ரூ.4000 உள்பட அனைத்து பொருட்களை அவரிடம் திரும்ப கொடுத்து விட்டோம் என்றும் அவரது பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran